Webdunia - Bharat's app for daily news and videos

Install App

CSK-வை கேவலப்படுத்திய விஜய் ரசிகர்! கொதித்தெழுந்த பிக்பாஸ் விஜயலட்சுமி !

Webdunia
புதன், 8 மே 2019 (17:12 IST)
2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. தற்போது  12வது சீசன் நடைபெற்று வருகிறது. 


 
இந்த ஆண்டிற்கான ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி விறுவிருப்பன பிலே ஆப் சுற்றை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நேற்று சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில், முதலில் ஆடிய சிஎஸ்கே 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது.
 
தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியும் கொஞ்சம் திக்குமுக்காடி, பிறகு சிஎஸ்கேவை விட ஓரளவுக்கு நன்றாக பேட் செய்து 18.3 ஓவர்களில் 132/4 என்று வெற்றி பெற்று 5-வது முறையாக ஐபிஎல் இறுதிக்கு முன்னேறியது.
 
சென்னை அணி மும்பை அணியிடம் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதால் சென்னை அணியை மும்பை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் "கிளம்பு கிளம்பு, ஃபைனலுக்கு வந்தாலும் அடி தான் வாங்க போறீங்க" என்று கிண்டலாக பதிவிட்டிருந்தார். 


 
இந்த பதிவை கண்டு கடுப்பான நடிகை விஜயலக்ஷ்மி, "அட பாவி, தமிழ் பேசுற, தளபதி சூர்யான்னு சொல்ற. மும்பை இண்டியன்ஸ் ரசிகரா. ஃபைனலுக்கு வந்துட்டு நாங்க பேசுவோம் . அதுவரைக்கும் நீங்க சத்தமா பேசிகோங்க" என்று பதில் ட்வீட் செய்துள்ளார்.  இப்படி விஜயலக்ஷ்மி மட்டுமல்லாமல் பலரும் அந்த நபரை திட்டி வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments