Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாள் ஸ்பெஷல்… விஜய்யின் பழைய படங்களை தூசு தட்டும் திரையரங்குகள்!

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (15:16 IST)
நடிகர் விஜய்யின் பிறந்த்நாள் ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அவர் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது இன்று ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. படத்தில் நடிக்கும் முக்கியக் கதாபாத்திரங்களுக்கான நடிகர் நடிகைகள் பற்றி onboard தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. மேலும் ‘தளபதி 66’ படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் எனவும் அந்த போஸ்டர்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகாத நிலையில் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஐ முன்னிட்டு ஜூன் 21 ஆம் தேதி தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான போட்டோஷூட் சமீபத்தில் சென்னையில் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் பிறந்தநாளன்று விஜய் ரசிகர்களை குஷிப்படுத்த அவரின் பழைய படங்களை சில திரையரங்குகள் மறுபடியும் ஸ்க்ரீன் செய்ய முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. வேலூரில் உள்ள விஷ்ணு சினிமாஸ் தங்கள் திரையரங்கில் விஜய்யின் ஹிட் படமான திருப்பாச்சியை ரி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது சம்மந்தமான டிவீட் தற்போது இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவதூறு: பிரபல யூடியூபர் மீது வழக்குப் பதிவு!

என்னுடைய புகைப்படத்தை காட்டினால் ஏமாந்துவிடாதீர்கள்.. நடிகர் ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு..!

அடியாத்தி நான் இப்ப ஃபெயிலு… வாத்தி புகழ் சம்யுக்தாவின் க்யூட் போட்டோஸ்!

ஷிவாணி நாராயணனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

ரஜினி சாருக்கு நான் துருவ நட்சத்திரம் கதையைதான் சொன்னேன்… கௌதம் மேனன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments