Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் சினிமா பயணம் ஒரு பார்வை

இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் சினிமா பயணம் ஒரு பார்வை
, வெள்ளி, 22 ஜூன் 2018 (13:26 IST)
துப்பாக்கியின் தோட்டாக்களை தன் கத்தி போன்ற பார்வையாள் தெறிக்கவிடும் வேட்டைக்காரனின் சினிமா பயணம் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.
 
கடந்த 1974ம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் - ஷோபா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் ஜோசப் விஜய். இவரை எஸ்.ஏ. சி எப்படியாவது மருத்துவர் ஆக்கிவிட வேண்டும் என கனவு கண்டார். ஆனால், விஜய்யோ தான் சினமாவில் எப்படியாவது ஹீரோவாக வேண்டும் என்ற கணவில் இருந்தார். இதனால் எஸ்.ஏ. சி, விஜய்யை ஹீரோவாக நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால், அந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
 
இதையடுத்து, விஜய், விஜய்காந்துடன் சேர்ந்து செந்தூர பாண்டி என்ற படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் சுமாரான வெற்றியை பெற்றது. இதன் பின்னர் விஜய் நாளை எழுத்தப்பட போகும் தீர்ப்பை நம்பாமல் ரசிகனை நம்பி களமிறங்கினார். இதனால் விஜய்யின் முதல் ஹிட் படமாக அமைந்தது ரசிகன். அதையடுத்து, வெளிவந்த தேவா, விஷ்ணு எல்லாம் விஜய்க்கு சுமாரான படங்களாக அமைந்தது. இப்படி விஜய்யின் பாதை சுமாராக சென்று கொண்டிருந்தபோது அவருக்கு விக்ரமன் ‘பூவே உனக்காக’ என்ற படத்தை கொடுத்து இளைஞர்கள் கொண்டாடும் நாயகனாக விஜய்யை மாற்றினார். இதையடுத்து, இயக்குனர் ஃபாசில் விஜய்யின் திரையுலக பயணத்திற்கு மைல் கல் அமைக்கும் வகையில் ‘காதலுக்கு மரியாதை’ என்ற படத்தை கொடுத்தார். இந்த படத்தினால் விஜய்க்கு குடும்ப ரசிகர்கள் அதிகமானார்கள். இதைத்தொடர்ந்து வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் துள்ள வைத்தது.
 
இதன் பின்னர் விஜய்யின் திரையுலக பயணத்தில் சின்ன சரிவு ஏற்பட்டது. இதனை எஸ்.ஜே. சூர்யாவின் குஷி சரிகட்டியது. அதைத்தொடர்ந்து இவர் நடித்த பிரியமானவளே, ப்ரண்ட்ஸ், பத்ரி போன்ற படங்கள் தொடர் ஹிட் தான். இப்படி காதல் நாயகனாகவும், ஏதார்த்த நாயகனாகவும் நடித்த கொண்டிருந்த விஜய், ‘திருமலை’ படத்தின் மூலம் ஆக்‌ஷன் ஹிரோவாக களம் இறங்கி வெற்றி பெற்றார். திருமலையை தொடர்ந்து இவர் ஆக்‌ஷன் ஹிரோவாக நடித்த ‘ கில்லி’ படம் விஜய்க்கு மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்த்தை கொடுத்தது. அதைத்தொடர்ந்து இவர் ஆக்‌ஷன் பாணியில் நடித்த ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ என அனைத்து படங்களும் திரையரங்குகளில் விசில் சத்தத்தையும், வசூல் சத்தத்தையும் சிதற விட்டது.
 
இப்படி ஆகஷ்ன் பாணியில் பயணித்த கொண்டிருந்த விஜய்யின் பயணத்தில் இன்னொரு மைல்கல்லாக அமைந்த படம் போக்கிரி. இப்படம் திரையிட்ட இடமெல்லாம் வெற்றி விழா கண்டது. இதனையடுத்து, விஜய் திரும்பவும் சரிவை நோக்கி சென்றார். இவர் நடித்த அழகிய தமிழ்மகன், வில்லு, சுறா போன்ற படங்கள் தோல்வியை சந்தித்தது. இதன்பின்னர் வெளிவந்த காவலன் விஜய்யின் திரையுலக பயணத்தை காத்தது. அதைத்தொடர்ந்து வெளிவந்த வேலாயுதம் விஜய்யை திரும்பவும் ஃபார்முக்கு கொண்டு வந்தது.
 
இதையடுத்து, விஜய், ஏ.ஆர். முருகதாஸுடன் 2012ம் ஆண்டு தீபாவளிக்கு தூப்பாகியுடன் களமிறங்கினார். இந்த தூப்பாக்கியில் இருந்த வெளிவந்த தோட்டாக்கள் பாக்ஸ் ஆபிஸ்ஸை சிதறவிட்டன. தமிழில் எந்திரனுக்கு அடுத்து 100 கோடி வசூல் செய்த படம் என்ற பெயரை பெற்றது தூப்பாக்கி. மீண்டும் விஜய், ஏ.ஆர். முருகதாஸுடன் இணைந்து 2014ம் ஆண்டு கத்தியுடன் தீபாவளிக்கு வேட்டைக்கு சென்றார். இந்த வேட்டையும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ்ஸை அலற வைத்தது. இதைத்தொடர்ந்து விஜய்யின் தெறி, மெர்சல் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று அவரை தென்னிந்தியா மட்டுமல்லாமல் பாலிவுட் வரையிலும் அவரது வசூல் சாதனையை பற்றி பேச வைத்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹவுஸ்மேட்டுடன் சண்டைபோடும் நித்யா: புலம்பும் பாலாஜி