Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் ஆண்டனியின் ரத்தம் படத்தின் டிரைலரை வெளியிடும் இரண்டு பிரபல இயக்குனர்கள்!

விஜய் ஆண்டனியின் ரத்தம் படத்தின் டிரைலரை வெளியிடும் இரண்டு பிரபல இயக்குனர்கள்!
, சனி, 9 செப்டம்பர் 2023 (07:24 IST)
தமிழ்படம் 1 மற்றும் 2 ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் இயக்குனர் சி எஸ் அமுதன். இப்போது அவர் தன்னுடைய ரூட்டை மாற்றி  ரத்தம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடித்துள்ளனர்.

முந்தைய படங்களைப் போல இல்லாமல், சீரியஸான ஒரு பிரச்சனையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் சி எஸ் அமுதன். இந்நிலையில் இந்த படம் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த டிரைலரை இயக்குனர்கள் பா ரஞ்சித் மற்றும் வெங்கட்பிரபு ஆகியோர் வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாரிமுத்துவே கார் ஓட்டி வராமல் வேறு யாராவது ஓட்டி வந்திருந்தால் காப்பாற்றி இருக்க வாய்ப்பு உண்டு… மருத்துவர் தகவல்!