Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட் படத்தின் பேனர்களில் கட்சிப் பெயரை பயன்படுத்தக் கூடாது… ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்!

vinoth
புதன், 7 ஆகஸ்ட் 2024 (08:45 IST)
விஜய் நடித்துள்ள கோட் (the greatest of all time) திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. வழக்கமாக விஜய் படங்களில் பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவரும். ஆனால் இந்த படத்தில் விஜய் ரசிகர்களே பாடல்கள் நன்றாக இல்லை என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

ஆனாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் ரசிகர்கள் படத்தின் போஸ்டர்கள் மற்றும் பேனர்களை அடிக்க ஆரம்பித்துள்ளனர். இது சம்மந்தமான போஸ்டர்களில் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயர் இடம்பெறக் கூடாது என விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளருக்கு செலவு சுமை கொடுக்காமல் சம்பளம் வாங்கும் சல்மான் கான்.. தமிழ் நடிகர்களும் பின்பற்றுவார்களா?

பீரியட் படமாக இருந்தும் ‘பராசக்தி’ படத்தை வித்தியாசமாக படமாக்கும் படக்குழு!

சம்பளத்தை சொல்லி சன் பிக்சர்ஸையே ஓடவிட்ட அட்லி… அல்லு அர்ஜுன் படத்தில் நடந்த மாற்றம்!

சிம்பு 49 படம் தொடங்குவதில் தாமதம்… இதுதான் காரணமா?

வடசென்னை 2’ படத்தில் தனுஷ், வெற்றி மாறன் தான்.. தயாரிப்பாளர் மட்டும் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments