Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்னேஷ் நடிப்பில், இறுதிக்கட்டத்தை எட்டிய "ரெட் ஃபிளவர்"

J.Durai
வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (12:33 IST)
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில்  K மாணிக்கம் தயாரிப்பில், நடிகர் விக்னேஷ் நடிப்பில், எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களத்தில், புதுமையான அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகும்  "ரெட் ஃபிளவர்" திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
 
எதிர்காலத்தை தத்ரூபமாக காட்டும் வகையில் இதன் VFX பணிகள் தற்போது உலகமெங்கும் பிரம்மாண்டமாகத் நடந்து வருகிறது இந்நிலையில், தற்போது ஹங்கேரிய இசைக்குழுவுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் ராம் இப்படத்திற்காக பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் துவக்கியுள்ளார். 
 
தமிழ் இசைத்துறையில்  திறமையான சந்தோஷ் ராம், புதுமையான ஒலிப்பதிவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்தத் திரைப்படத்தில் தனது முழுப் படைப்பாற்றலை செலுத்தி வருகிறார்.
 
இது குறித்து சந்தோஷ் ராம் கூறுகையில்......
 
இது எனது முதல் படம் என்பதால், இசையை தனித்து நிற்கச் செய்ய வேண்டி, என்  முழு உழைப்பையும் தந்து வருகிறேன். ரெட் ஃபிளவர்  எதிர்காலத்தில் நடக்கும் கதை, எனவே சயின்ஸ் பிக்சனுக்கு ஏற்றவாறான  புதுமையான ஆர்கெஸ்ட்ரா இசையை நவீன வகையில் உருவாக்க , ஹங்கேரிய இசைக்குழுவுடன் இணைந்து உருவாக்கி வருகிறேன். 
 
இயக்குநர்  ஆண்ட்ரூ பாண்டியன் கூறுகையில்.......
 
இந்தப் படத்தின் பின்னணி இசையில் புதுமையை தரும் நோக்கத்தில், ஒவ்வொரு பிரேமிலும் அதீத உழைப்பைத் தந்து வருகிறார். ரெட் ஃப்ளவருக்கு ஒரு தனித்துவமான ஒலியைக் கொண்டுவர அயராது உழைக்கிறார், 
ஹங்கேரிய இசைக்குழுவுடன் இணைந்து  அவர் உருவாக்கும் இசை இந்திய இசைத்துறையில் மிகப்பெரும் அலைகளை உருவாக்கும்.  அவரது  அர்ப்பணிப்பும் உழைப்பும் பிரமிக்க வைக்கிறது.  கண்டிப்பாக பார்வையாளர்களிடம் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments