சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்துவிடலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த வகையில் தமிழ் சினிமாவை ஆட்டி படைத்து வரும் தமிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுங்கள் என அரசுக்கும் காவல்துறைக்கும் திரையுலகினர் சொல்லி சொல்லி வெறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழ் ராக்கர்ஸ் அட்மினிடமே இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கெஞ்ச ஆரம்பித்துவிட்டனர். குறைந்த பட்சம் ஒருவாரமாவது படத்தை போடாமல் எங்களை காப்பாற்றுங்கள் என்று கெஞ்ச தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில் சமீபத்தில் ஒருசில தயாரிப்பாளர்கள் தமிழ் ராக்கர்ஸ் அட்மினிடம் வேண்டுகோள் வைக்க, அதற்கு தமிழ் ராக்கர்ஸூம் செவிசாயத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனும் தற்போது தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திடம் உருக்கமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதோ விக்னேஷ் சிவனின் டுவீட்