Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம்…இயக்குனர் கௌதம் மேனனுக்கு முக்கிய பொறுப்பு

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (15:30 IST)
நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் இன்னும் சில நாட்களில் நடக்க உள்ளது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதியில் நடைபெற இருப்பதாகவும் அங்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் சமீபத்தில் பிரபல இணையதளம் ஒன்று நயன்தாரா திருமணம் குறித்த அழைப்பிதழ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் நடக்க உள்ளதாக அறிவுக்கப்பட்டு இருந்தது.  மேலும் இந்த திருமணத்திற்கு நயன்தாரா மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த திருமணத்தின் வீடியோ ஒளிபரப்பு உரிமையை முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த வீடியோவை ஒரு திரைப்பட பாணியில் அழகாக உருவாக்கி தரும் பொறுப்பை இயக்குனர் கௌதம் மேனனிடம் ஒப்படைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

அடுத்த கட்டுரையில்