Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருங்கால மாமனாருக்கு உருகி உருகி வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்… வைரல் புகைப்படம்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (09:00 IST)
இயக்குனர் விக்னேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளாக காதலில் உள்ளனர். விரைவில் அவர்கள் திருமணம் நடக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இருவரும் இப்போது தங்கள் படங்களில் பிஸியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தன்னுடைய வருங்கால மாமனாரும் நயன்தாராவின் தந்தையுமான குரியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியுள்ளார்.  அதில் ‘ஹேப்பி பர்த்டே அச்சன்…நீங்கள் சிரிப்பது, சாப்பிடுவது.. எங்களை பார்ப்பது எல்லாம் மகிழ்ச்சியான விஷயங்கள். உங்களின் இருப்பு எங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றுகிறது. கடவுள் உங்களுக்கு பலமும் ஆற்றலும் கொடுத்து எங்களோடு காலாகாலத்துக்கும் இருக்க வைக்க வேண்டும். லவ் யூ அச்சு… நீங்கள்தான் எங்கள் ஆசி’ என உருக்கமாகக் கூறியுள்ளார்.

சமீபகாலமாக தனது தந்தை உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருதாக நயன்தாரா ஒரு நேர்காணலில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments