அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், சற்றுமுன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா தனது சமூக வலைதளத்தில் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் திசையில் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், சற்று முன் இந்த தகவலை லைக்கா நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளது.
இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும் கூறியுள்ள லைக்கா, 2025 பொங்கல் தினத்தில் நிச்சயம் வெளியாகும் என்றும் விடாமுயற்சி திருவினையாக்கும் என்று அறிவித்துள்ளது.
மேலும் அஜித்தின் ஸ்டைலிஷ் ஆன புகைப்படம் மற்றும் திரிஷாவுடன் அஜித் இருக்கும் புகைப்படம் ஆகிவற்றை வெளியிட்டுள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
இந்த தகவலை அடுத்து, விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆவது உறுதி என்ற நிலையில், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.