வெற்றிமாறனின் பிறந்த நாளில் சிம்பு பட அறிவிப்பு.. மாஸ் வீடியோவை வெளியிட்ட தாணு..!

Mahendran
வியாழன், 4 செப்டம்பர் 2025 (18:25 IST)
"வெற்றி நடை வீர நடை, வெல்லும் இவன் படை" என்ற அடைமொழியுடன், அகவை 50-ல் அடியெடுத்து வைக்கும் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் என தயாரிப்பாளர் தாணு, வெற்றிமாறனுக்கு தனது எக்ஸ் பகக்த்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
மேலும் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான இவர், தனது தனித்துவமான கதை சொல்லல் மூலம் எட்டுத் திக்கும் புகழ் எதிரொலிக்கிறார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்..
 
இந்த நிலையில் வெற்றி மாறனின் பிறந்த நாளான இன்று பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது தயாரிப்பு நிறுவனமான 'வி கிரியேஷன்ஸ்' மூலம் நடிகர் சிலம்பரசன்  நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
இது 'வி கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் 47வது படமாகவும், சிலம்பரசனின் 49வது படமாகவும் இருக்கும் என்று தாணு தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த திரைப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments