Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டருக்காக காத்திருக்கும் சிம்பு படக்குழு!

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (16:46 IST)
சிம்பு நடித்துவரும் வெந்து தணிந்தது காடு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.

நடிகர் சிம்பு தனது திரையுலக வாழ்க்கையின் இரண்டாம் இன்னிங்ஸில் இருக்கிறார். இதையடுத்து அவர் நடித்துள்ள மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது.. இந்நிலையில் அடுத்து அவர் நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இப்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த மாதத்துக்குள் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டுவர தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி படத்தில் சண்டைக் காட்சிகள் தவிர மற்றக் காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டு விட்டதாம். முக்கியமான சண்டைக் காட்சிகளை படமாக்குவதற்காக ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவரைப் படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்காக இப்போது படக்குழு காத்திருப்பதாகவும், விரைவில் அந்த காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக் கானின் ‘கிங்’ படத்தின் இயக்குனர் திடீர் மாற்றம்!

ராமாயணம் படத்தில் வில்லனாக நடிக்க இவ்வளவு சம்பளமா?... ஆச்சர்யப்படுத்தும் யாஷ்!

அமெரிக்காவில் கமல்ஹாசனோடு திரைக்கதை எழுதும் ‘அன்பறிவ்’ மாஸ்டர்ஸ்!

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

சூர்யா 45: இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் இன்னொரு பொறுப்பையும் ஏற்கும் ஆர் ஜே பாலாஜி!

அடுத்த கட்டுரையில்
Show comments