Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் 68 படத்துக்கு ஹீரோயின் இவரா? வெங்கட் பிரபுவின் சாய்ஸில் பழைய நடிகை!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (07:24 IST)
விஜய் தற்போது நடித்து வரும் லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க தமன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் லியோ ரிலீஸ் வரை வெளிவராது என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது புதிய தகவலாக இந்த படத்தில் ஜோதிகாவை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என்ற முடிவை வெங்கட் பிரபு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது வயதான ஹீரோக்களுக்கு அவர்களுக்கு இணையான வயதுடைய நடிகைகளை நடிக்கவைப்பது ட்ரண்ட் ஆகியுள்ளது. இதனால் குஷி, திருமலை ஆகிய படங்களில் இணைந்து நடித்த விஜய், ஜோதிகா ஜோடியை மீண்டும் இணைக்கலாம் என வெங்கட்பிரபு முடிவெடுத்திருக்கலாம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் பயிறிசியின் போது அஜித் சென்ற கார் விபத்து…! உடல்நிலை குறித்து மேலாளர் வெளியிட்ட தகவல்!

சீனாவிலும் மகாராஜாவின் ஆதிக்கம்.. ஆமிர்கானுக்கு நிகரான வசூல்!

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் மாளவிகா மோகனன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்… லேட்டஸ்ட் ஆல்பம்!

படம் கனெக்ட் ஆகுமா என பயந்தேன்.. ஆனால்?- மத கஜ ராஜா குறித்து திருப்பூர் சுப்ரமணியம் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments