Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல நடிகரை நிராகரித்த வெங்கட்பிரபு....சுவாரஸ்ய சம்பவம்!

aravind akash, venkatprabhu

Sinoj

, திங்கள், 4 மார்ச் 2024 (21:48 IST)
இயக்குனர் வெங்கட்பிரபு  மற்றும் மாரி.செல்வராஜிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்  சுரேஷ் மாரி. இவர் இயக்குனராக அறிமுகமாகும் படம்  ஜே.பேபி.
 
இப்படத்தில்  ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோட் நடித்துள்ளனர்.  இப்படத்தை பா.ரஞ்ச்சின்  நீலம் தயாரிப்பு நிறுவனமும், விஸ்டாஸ் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கின்றன.
 
இப்படம் மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இண்று சென்னையில் நடைபெற்றது.
 
இந்த விழாவில்  பேசிய இயக்குனர் வெங்கட்பிரபு,  அரவிந்த் ஆகாஷுக்கு சென்னை 28 படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர் வெள்ளையாக இருந்ததால், ஏரியா பையன் போல் தோற்றமளிக்க மாட்டார் எனக்கூறி மறுத்துவிட்டேன். ஆனால் அவருடைய இடத்தில் நடிக்க இருந்தவருக்கு கிரிக்கெட் விளையாட தெரியாததால், அரவிந்தையே நடிக்க வைத்தோம் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், வழக்கமாக ஹீரோ ஹீரோயின் வைத்து படமெடுக்கும் இக்காலத்தில்ம்  ஹீரோயின்  இல்லாமல், ஒரு நண்பர்கள் கூட்டத்தை வைத்து இயக்கப்பட்ட மஞ்சுமல் பாய்ஸ் படம் தமிழ் நாட்டில் மற்ற படங்களை விட நன்றாக ஓடிக்கொண்டுள்ளது. கதை  நன்றாக இருந்தால் எந்த மொழியாக இருக்கவேண்டும் என அவசியமல்ல என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தப் படத்திற்கு நான் இசையமைக்கவில்லை- யுவன்சங்கர் ராஜா