இயக்குனர் வசந்தபாலன் சமீபத்தில் வெளியாகி பரவலாக பாராட்டைப் பெற்றுள்ள ஹோம் திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.
இது சம்மந்தமாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் "கதைக்காக எங்கெங்கோ தேடுகிறோம்...வீட்டுக்குள்ளேயே கதை இருக்கிறது என்பதை 'ஹோம்' திரைப்படம் உணர்த்துகிறது. இன்றைய வாழ்வின் அற்பங்கள் மூலமாக வாழ்வின் அதி உன்னதத்தை ஹோம் பேசுகிறது. ஒரு மாத கண்ணீரும் நேற்றிரவு என் தலையணையை நனைத்தது. கண்ணீர் வெளியேறியது ஒருவித விடுதலையாக இருந்தது. நன்றி #home.
மலையாள சினிமா ஓடிடியின் தன்மையை, தனித்துவத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு தொடர்ந்து நல்ல திரைப்படங்களை எழுதி வெளியிடுகிறது. தமிழ் சினிமா உண்மையாகவே மூச்சு திணறுகிறது. திரைக்கதை ஆசிரியர்களை உருவாக்கத் தவறியதின் துயரத்தை அனுபவிக்கிறோம்" என பாராட்டியுள்ளார்.