Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலுக்கு திருமணமா...? கொந்தளித்த வரலட்சுமி சரத்குமார்

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2018 (17:56 IST)
நடிகரும், நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவரும் விரைவில் அரசியல்வாதியாக மாறவிருப்பவருமான விஷால் 40 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். 
 
நடிகர் சங்கத்திற்கு என சொந்த கட்டிடம் கட்டி முடித்தவுடன் திருமணம் என்று கூறி வந்த விஷால், தற்போது நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகள் முடிவடையவுள்ள நிலையில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாராம்.
 
ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை விஷால் திருமணம் செய்யவிருப்பதாகவும், இது பெற்றோர்கள் முடிவு செய்த பெண் என்றும், பெண்ணின் பெயர் அனிஷா என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
 
முன்னதாக நடிகர் விஷால், நடிகை வரலட்சுமியை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இவரது திருமண செய்தி வெளியானது முதல் அனைவரின் கவனமும் வரலட்சுமி பக்கம் திரும்பியுள்ளது. 
 
இதனால் கடுப்பான வரலட்சுமி பின்வருமாறு தெரிவித்துள்ளார், எப்போதும் போல வருடத்தின் இறுதியில் வேலையில்லாத சிலர் எனக்கு திருமணம் என்ற வதந்தியை பரப்பி வருகிறார்கள். நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. வதந்தியை பரப்புவது யார் என்று எனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
 
விஷால் திருமணம் குறித்து, நடிகர் விஷால் எனக்கு நெருக்கமான நண்பர். எல்லா வி‌ஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். விஷால் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடைய போவதும் நான்தான். ஆனால், விஷாலுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'சூர்யா 45’ படத்தில் இணைந்த ‘கங்குவா’ நடிகர்.. இயக்குனர் ஆர்ஜே பாலாஜி அறிவிப்பு..!

25 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவைத் தொடங்கிய ராம்சரணின் ‘கேம்சேஞ்சர்’ படக்குழு!

மறைந்த நகைச்சுவைக் கலைஞரின் பயோபிக்கில் நடிக்கிறாரா தனுஷ்?

விடுதலை 2 படத்தை சிறுவர்கள் பார்க்கலாமா?... சென்சார் போர்டு அளித்த சான்றிதழ்!

சிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நிலை குறித்து கவலை… வழக்கு நடப்பதால் சந்திக்க முடியவில்லை – அல்லு அர்ஜுன் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்