Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் வெறும் மொழியாளன், வேலையைப் பாருங்கள்: வைரமுத்து

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (10:20 IST)
கவியரசு வைரமுத்து குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகள் பதிவாகிக் கொண்டே இருக்கின்றன. வைரமுத்து கவிஞரரா? அல்லது பாடலாசிரியரா? என்று சிலர் தேவையில்லாத சந்தேகத்தை எழுப்பி வந்தது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது 
 
இந்த நிலையில் வைரமுத்து தனது டுவிட் ஒன்றின் மூலம் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். தற்போதைய கொரோனா வைரஸ் பரபரப்பு நேரத்தில் நான் கவிஞனா? அல்லது பாடலாசிரியனா? என தேவையில்லாத கேள்வி எழுப்புவது வீண் என்றும் நான் வெறும் மொழியாளன் என்றும் அதனால் வேலையை பாருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இது குறித்து பதிவு செய்த டுவிட் பின்வருமாறு:  
 
நாட்டின் உயிரும் பொருளும்
மானமும் அறிவும் 
இன்னற்படும் இந்த எரிபொழுதில்
நான் கவிஞனா பாடலாசிரியனா 
நாவலாசிரியனா நாவலனா என்று சிலர் 
வினாவெழுப்புவது வீண். 
நீங்கள் நினைக்கும் இடத்தில் நானில்லை.
நான் வெறும் மொழியாளன்.
வேலையைப் பாருங்கள்;
மனிதவளத்தை மனவளத்தை மாண்புறுத்துங்கள்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்
Show comments