“விவேக் இறந்தப்ப நான் போகலன்னு விமர்சிச்சாங்க… நானே அப்போ…” – முதல் முறையாக மனம் திறந்த வடிவேலு!

vinoth
வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (11:06 IST)
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு திடீரென இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் தமிழ் சினிமா உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. பலர் நேரில் சென்று அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஆனால் விவேக்கின் நெருங்கிய நண்பரும் சக நடிகருமான வடிவேலு அஞ்சலி செலுத்த செல்லவில்லை. மாறாக உணர்ச்சிவசப்பட்டு பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பேசிக் கொண்டிருக்கும்போதே கண்ணீர் சிந்தினார் வடிவேலு.

இந்நிலையில் இப்போது வடிவேலு ஏன் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்லவில்லை என்பது குறித்துப் பேசியுள்ளார். அதில் “நான் விவேக் இறந்தப்போ போகலன்னு நெறயப் பேர் பேசினாங்க. நான் அவங்க வீட்டுக்குப் போய் அவன் மனைவி, குழந்தைங்க கிட்ட எல்லாம் விசாரிச்சேன். அந்த நேரத்துல நானும் ரொம்ப மோசமாதான் இருந்தேன். எங்க வீட்டுலயே எல்லாரும் பயத்துலதான் இருந்தாங்க. அதனாலதான் நான் போகல” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுகிறாரா பும்ரா? என்ன காரணம்?

24 மீட்டர் சுதந்திர தேவி சிலை கீழே விழுந்து நொறுங்கியது.. பலத்த சூறாவளி காற்றால் விபரீதம்..!

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

பிரபல இயக்குனர்- மனைவி என இருவரும் கத்தியால் குத்திக்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் ‘தமிழ் வாழ்க’.. தெலுங்கு மாநிலங்களில் 'தெலுங்கு வாழ்க': சிவகார்த்திகேயன் குழப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments