Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘சூர்யாவுக்கு முன்பே தனுஷ் சிக்ஸ்பேக் வைத்தார்… சிவகுமார் மறந்திருப்பாரு’- விஷால் பதில்!

vinoth
வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (10:58 IST)
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மே 1 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யாவின் தந்தை சிவகுமார் “சூர்யாவுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் எவன் இருக்கான்? இதை நான் பணிவோடுதான் சொல்றேன்” என்று பேசியிருந்தார்.

ஆனால் சூர்யாவுக்கு முன்பே அர்ஜுன் எல்லாம் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவில்லையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில் சிவகுமாரின் பேச்சு சம்மந்தமாகப் பேசிய நடிகர் விஷால் “தனுஷ்தான் முதலில் பொல்லாதவன் படத்துக்காக சிக்ஸ் பேக் வைத்தார்.  அதுக்கப்புறம் நானும் 2008 ஆம் ஆண்டு சத்யம் திரைப்படத்துக்காக வைத்தேன். இது தெரியாமல் சிவகுமார் பேசியிருப்பார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்த வழக்கு… நீதிமன்றத்தில் ஆஜரான பா ரஞ்சித்!

பிரபாஸின் ராஜாசாப் படத்தில் முதியவராக சஞ்சய் தத்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

நண்பன் ரத்னகுமாருக்காக தயாரிப்பாளர் ஆகும் லோகேஷ் கனகராஜ்!

கூலி படத்தில் பிஸி… கிங்டம் படத்தின் பின்னணி இசையை ‘அவுட்சோர்ஸ்’ செய்யும் அனிருத்!

பீரியட் படமாக உருவாகிறதா தனுஷ் & விக்னேஷ் ராஜா இணையும் படம்?

அடுத்த கட்டுரையில்
Show comments