Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் வடிவேலு டிஸ்சார்ஜ் எப்போது? மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

நடிகர் வடிவேலு டிஸ்சார்ஜ் எப்போது? மருத்துவமனை நிர்வாகம் தகவல்!
, சனி, 1 ஜனவரி 2022 (17:57 IST)
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவலை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
நடிகர் வடிவேலு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தின் பணிகளுக்காக லண்டன் சென்று இருந்தார் என்பதும் அவர் மீண்டும் இந்தியா திரும்பியவுடன் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் வடிவேலுவின் உடல்நிலை சீராக இருப்பதாக ஏற்கனவே மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்த நிலையில் சற்று முன்னர் வடிவேலு முழுமையாக குணமாகி விட்டதாகவும் அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிகப்பெரிய கொண்டாட்ட மனநிலையுடன் 2021 ஆண்டை முடிக்கிறேன்: சிம்பு அறிக்கை