Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘மாடில நிக்குற மான்குட்டி’ -வடசென்னை பாடல் டீசர் வெளியானது

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (17:46 IST)
தனுஷ் நடித்திருக்கும் வடசென்னைப் படத்தின் பாடல் டீசர் இன்று வெளியாகி இருக்கிறது.
தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ், தயாரிப்பில் வெற்றிமாறனின் கனவுத் திரைப்படமான வட சென்னை நீண்ட எதிர்ப்பார்ப்பிற்குப் பின் ஆயுதபூஜை வெளியீடாக வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தில் அன்பு என்ற கேரக்டரில் வரும் தனுஷ் உலகச் சாம்பியன் ஆக நினைக்கும் நேசனல் லெவல் கேரம் ப்ளேயராக நடித்துள்ளார். மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் வடசென்னையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இப்படத்தில் மிகப்பெரிய அரசியலும்  இருக்கிறது.வட சென்னை மக்களின் நிலம் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் மறுக்கப்பட்டு நெருக்கடியில் தள்ளப்படும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் கதை.   இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி,  அமீர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
 
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாடில நிக்குற மான்குட்டி’ பாடலின் வீடியோ டீசர் வெளியாகி உள்ளது. பதின் வயது காதலர்களான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் காதல் காட்சிகளைக் கொண்டுள்ள பாடலாக இந்த பாடல் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments