Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவர் மோசமானவர்! நானே படேகர் மீது பிரபல நடிகை பாலியல் புகார்

Advertiesment
அவர் மோசமானவர்! நானே படேகர் மீது பிரபல நடிகை பாலியல் புகார்
, வியாழன், 27 செப்டம்பர் 2018 (10:27 IST)
பிரபல பாலிவுட் நடிகரும், காலா படத்தில் வில்லனாக நடித்த நானே படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா கூறியுள்ள புகார் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
பாலிவுட்டில் சிறந்த நடிகர் என பெயரெடுத்தவர் நானா படேகர். தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் பொம்மலாட்டம் படத்தில் நடிட்த்திருந்தார். ரஜினி நடித்த காலா படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
 
இவர் மீதுதான் தனுஸ்ரீ தத்தா பாலியல் புகாரை கூறியுள்ளார். இவர் மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர். தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், இந்தி, தெலுங்கு மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார்.
 
சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் “ 2008ம் ஆண்டு ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற படத்தின் பாடல் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தோம். பெண் மட்டுமே பங்கு பெறும் அப்பாடலில் திடீரென நானா படேகர் உள்ளே நுழைந்தார். இதை நான் கண்டித்தேன். ஆனால், தனக்கு பிடித்ததை நான் செய்வேன். என்னை யாரும் கேட்க முடியாது என படேகர் கத்தினார். தயாரிப்பாளர், இயக்குனர், நடன இயக்குனர் என அனைவவும் அவருக்கு சாதகமாகவே செயல்பட்டனர். அப்போது, என் உடலில் தகாத இடங்களில் கை வைத்து படேகர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
 
இதுபற்றி நான் வெளியே கூறியதால் நானே படேகரின் ஆதரவாளர்கள் என்னை மிரட்டினர். நான் எனது குடும்பத்துடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தாக்குதலுக்கும் உள்ளானேன். ரஜினிகாந்த், அக்‌ஷய்குமர் போன்ற நடிகர்கள் இதுபோன்ற நடிகருடன் நடிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையேல் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும். நானே படேகர் போன்ற ஆட்கள் பெண்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது. பல புதுமுக நடிகைகள் இந்த வலிகளை சுமந்து கொண்டுதான் இருக்கின்றனர்” என அவர் கூறினார்.
 
அவரின் இந்த குற்றச்சாட்டு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மு.க.ஸ்டாலினுக்கு அறுவை சிகிச்சை - அப்போலோ அறிக்கை