Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’… வெளியான சென்சார் தகவல்!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (10:40 IST)
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மே 20 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி, அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இப்போது மொத்தமாக படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் ரிலிஸுக்கான பணிகள் தொடங்க உள்ளன.

உதயநிதி சட்டமன்ற உறுப்பினராக ஆனதற்குப் பின்னர் வெளியாக உள்ள முதல் திரைப்படம் என்பதால் இதன் மீது பெரும் நம்பிக்கையில் இருக்கிறாராம். இந்நிலையில் படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் மே 20 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சென்சார் அதிகாரிகள் படத்துக்கு UA சான்றிதழ் அளித்துள்ளனர். இதைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

அடுத்த கட்டுரையில்
Show comments