Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விக்ரம் பட உரிமையைக் கைப்பற்றிய விஜய் பட தயாரிப்பாளர்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விக்ரம் பட உரிமையைக் கைப்பற்றிய விஜய் பட தயாரிப்பாளர்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
, சனி, 30 ஏப்ரல் 2022 (08:57 IST)
கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள விக்ரம் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய மூவரின் கதாபாத்திரங்களைப் பற்றிய அறிமுகமாக ஒரு புதிய வீடியோவை இணையத்தில் வெளியிட, அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையடுத்து படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இப்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் டிரைலர் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப்புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் கேன்ஸ் திரைப்பட விழாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்துக்கு உருவாகியுள்ள எதிர்பார்ப்புக் காரணமாக மற்ற மொழிகளிலும் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளது ராஜ்கமல் பிலிம்ஸ். இந்நிலையில் படத்தின் கேரள விநியோக உரிமையை விஜய்யின் புலி படத் தயாரிப்பாளர் சிபு தமீம்ஸ் அதிக தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளார். இதுவரை கமல் படத்துக்கு இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான புகைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் அவற்றைப் பார்ப்பதில்லை… நவாசுதீன் சித்திக் பரபரப்பு கருத்து!