Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் அடுத்த படத்தில் இணையும் பாலிவுட் நடிகை!

vinoth
வெள்ளி, 12 ஜூலை 2024 (17:48 IST)
தமிழ் மொழியில் தனது நடிப்பு திறமையால் கலக்கிய தனுஷ் 2013 ஆம் ஆண்டு ராஞ்சனா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த கூட்டணி அத்ராங்கி ரே படத்தில் இணைந்தது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக தனுஷ்- ஆனந்த் எல் ராய்- ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்துள்ளது. ராஞ்சனா வெளியாகி 10 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் “தேரே இஷ்க் மேய்ன்” என்ற படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியிடப்பட்டாலும் இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை.

இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் இந்த பட ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் மொத்த ஷூட்டிங்கும் வாரணாசியில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக தனுஷ் மொத்தமாக 60 நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் அனிமல் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments