Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்பு பட நடிகைக்கு நேர்ந்த சோகம்!

Advertiesment
சிம்பு பட நடிகைக்கு நேர்ந்த சோகம்!
, வியாழன், 23 செப்டம்பர் 2021 (22:57 IST)
சிம்பு பட நடிகை ஒருவர் கணவரால் கைவிடப்பட்ட நிலையில் தற்போது வாடகைக் கார் ஓட்டி வருவதாக பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் வல்லவன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரீமா சென் மற்றும் நயன்தாரா இருவரும் நடித்தனர்.  இப்படத்தில் ஒரு பள்ளி மாணவி கதாப்பாத்திரத்தில் நடித்த பெண் ஒருவர் கணவரால் கைவிடப்பட்டு தற்போது வாடகைக் கார் ஓட்டிக் கொண்டிருப்பதாக காதல் சுகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,  நான் போஸ்ட் செய்த வல்லவன் லஷ்மிக்கு நிறைய மதிப்பீடுகள் வந்திருக்கிறது. லக்ஷ்மியை இன்று பேட்டி எடுத்திருக்கிறார்கள்.மூன்று இயக்குனர்கள் வாய்ப்பு தறுவதாக கூறியிருக்கின்றார்கள்.

குழந்தைகளுடன் அப்பெண் மகிழ்ச்சியில் அழுது நெகிழ்ந்து நன்றி தெரிவித்தாள். இன்னும் வெகுளியாக இருக்கும் அவள் "சார் இதெல்லாம் பார்த்தா வாய்ப்பு வருமா!" என்று இரண்டு வீடியோக்கள் அனுப்பியிருந்தாள். இவள் வாழ்வு மென்மேலும் சிறக்கட்டும் என்று வாழ்த்திய உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் எனத் தெரிவித்துள்ளார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமா செத்து போய் விட்டது ; நடிகர் ராதாரவி வேதனை