Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாஸ் ஹீரோக்கள் வீட்டில் ஐடி ரெய்டு..!

மாஸ் ஹீரோக்கள் வீட்டில் ஐடி ரெய்டு..!
, வெள்ளி, 4 ஜனவரி 2019 (11:48 IST)
மிகப்பெரிய ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை செய்ததற்கு பல கோடி கணக்கில் பணத்தை முதலீடு செய்து எடுக்கப்படும் பெரிய பட்ஜெட் படங்கள் தான் காரணம் என்று நடிகர் சுதீப் தெரிவித்துள்ளார்.


 
கர்நாடக திரையுலகத்திலே மிகப்பெரிய மெகா பட்ஜெட்டில் ரூ.80 கோடி செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம் ‘கே.ஜி.எப்.’ இந்த படம் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் பிரமாண்டமாக மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியிடப்பட்டது.
 
படம் வெளியான 10 நாட்களில் ரூ.150 கோடியை வசூலை குவித்து அபார சாதனையை படைத்தது "கே ஜி எப்" கன்னட சினிமாவில் வரலாற்றிலேயே  இவ்வளவு பெரிய வசூலை குவித்தது  என்கிறார்கள் கன்னட சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்கள். 
 
இந்நிலையில் தற்போது இந்த படத்தை தயாரித்தவருக்கு வந்த சோகம் என்னவென்றால் , ’கே.ஜி.எப்’. பட தயாரிப்பாளர் விஜய்கிரகந்தூர், சி.ஆர்.மனோகர் இருவரின் வீடுகள், அலுவலகங் களில் சோதனை நடத்தினர். காலை 6 மணியில் தொடங்கிய சோதனை மாலை வரை விடாமல்  நடந்தது. அவர்களை தொடர்ந்து , கன்னட திரைவுலகத்தில் முன்னணி ஹீரோக்களான சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார், சுதீப், யஷ் மற்றும் ’லிங்கா’ பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோரின் வீடுகளிலும் ஐடி ரெய்டு நடத்தியுள்ளனர். 
 
இதனை அறிந்த நடிகர் ’நான் ஈ’ சுதீப் படப்பிடிப்பை திடீரென ரத்து செய்துவிட்டு பெங்களூரு திரும்பியதாக தெரிவித்த அவர்  ‘’ எனது அம்மா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனால் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு வந்தேன். வருமான வரித்துறையினர் அவர்களின் பணியை செய்கிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன். பெரிய பட்ஜெட் படங்கள் கன்னட திரையுலகில் வெளியாகி வருகின்றன. இதுதான் வருமான வரி சோதனைக்கு காரணம் என்று நினைக்கிறேன்’’ என கூறினார்.  

webdunia

 
மேலும் சிவராஜ் குமார், யஷ், புனித் ராஜ்குமார் ஆகியோரின் சொத்து ஆவணங்கள் மற்றும் தங்க நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் கன்னட திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஸ்வாசம் , பேட்ட தலைகீழாக மாறிய தியேட்டர் நிலவரம்- கோபத்தில் அஜித் ரசிகர்கள்