Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2018ம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட டாப் 5 நடிகைகள்

2018ம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட டாப் 5 நடிகைகள்
, சனி, 29 டிசம்பர் 2018 (14:30 IST)
2018ம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட நடிகைகள் விவரத்தை பிரபல ஆங்கில செய்தி ஊடகம் வெளியிட்டுள்ளது.


 
1 கீர்த்தி சுரேஷ்
 
இந்த ஆணடு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட நடிகைக்கான முதல் இடத்தில் கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரது நடிப்பில் நடிகையர் திலகம், சர்கார் ஆகிய படங்கள் வெளிவந்தன.
 
2 சமந்தா
 
இரண்டாவது இடத்தில் சமந்தா உள்ளார். இவர் டுவிட்டரில் சக நடிகைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதற்கு எதிராக குரல் கொடுத்ததால் அதிகம் பேசப்படும் நடிகையாக பார்க்கப்படுகிறார். இவரது நடிப்பில் யூ டர்ன், சீமராஜா ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளியானது. கடந்த ஆண்டு ரங்கஸ்தலம் படம் காரணமாக முதல் இடத்தில் இருந்தார் சமந்தா.
 
3 காஜல் அகர்வால்
 
பிளாஸ்டிக்குக்கு எதிராக #beatplasticpollution என்ற பெயரில் இவர் வெளியிட்ட டுவிட் பல ஆயிரம் ரசிகர்களிட்ம் கொண்டு சேர்த்தது. இதுமட்டுமின்றி இப்போது பாரிஸ் பாரிஸ் டீசர் சர்ச்சையும் காஜலை 3வது இடத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
 
4 ரகுல் பிரீத் சிங்
 
நடிகை ரகுல் பிரீத் சிங் 2017ம் ஆண்டு 4து இடத்தில் இருந்தார். இப்போதும் அதே இடத்தை தக்கவைத்துள்ளார். இவர் இந்த ஆண்டு தேவ், என்ஜிகே மற்றும் என்டிஆர் கதநாயக்கடு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவை வரும் ஆண்டில் வெளியாக உள்ளது.
 
5 பூஜா ஹெக்டே
 
அரவிந்த சமிதா வீர ராகவா என்ற தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் பூஜா ஹெக்டே டாப் 5வது இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது மகரிஸி, மற்றும் ஹவுஸ்புல் 4 ஆகிய படஙகளும் பூஜா ஹெக்டேகை அதிகம் பேசப்படும் நடிகையாக உயர்த்தியுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெட்டி பந்தாவில் யாஷிகா, ஐஸ்வர்யா அண்ட் கோ: வெச்சு செய்யும் நெட்டிசன்கள்