Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

61 - வது வயதில் அடியெடுத்து வைத்தார் குண்டக மண்டக்க பார்த்திபன்

61 - வது  வயதில் அடியெடுத்து வைத்தார் குண்டக மண்டக்க பார்த்திபன்
, வியாழன், 15 நவம்பர் 2018 (13:28 IST)
நடிகரும், இயக்குநருமான ஆர். பார்த்திபன் அவர்களுக்கு இன்று 61 வது பிறந்தநாள்.
 
தனக்கென தனித்துவமான ஸ்டைல் வைத்திருப்பவர் பார்த்திபன்.
 
நடிகர் பார்த்திபன் மக்களை  தன் பேச்சு மற்றும் நகைச்சுவைகளின் மூலமாக மகிழ்ச்சி எனும் தீபத்தை ஏற்றுபவர்.
webdunia
 
எட்டையபுரத்தில் பிறந்த பார்த்திபன் சிறு வயதிலிருந்தே மேடை நாடகங்களில் நடித்தவர். பிறகு சென்னைக்கு வந்துவிட்டார். இயக்குனர் பாக்யராஜிடம் சினிமா கற்கும் பாக்கியம் பெற்றவர்களில் இவரும் ஒருவர். தென் தமிழகத்திலிருந்து வந்திருந்தாலும், கிராமப்பாங்கான முகமிருந்தாலும், கிராமங்களுக்கும் எனக்குமான தூரம் அதிகம் என்பார். எனக்குத் தெரிந்ததெல்லாம் 'சாலிகிராமம்' தான் என்று வழக்கமாக நக்கலுடன் கூறுவார்.
 
ராணுவ வீரன், தாவணிக் கனவுகள், தூரம் அதிகமில்லை போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தலைகாட்ட ஆரம்பித்த பார்த்திபன், புதிய பாதை திரைப்படத்தின் மூலம் இயக்குனரானார். பெயருக்கு ஏற்றாற்போல் உண்மையாகவே திரைப்படங்களின் கதைக்கு புதிய பாதையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. அப்படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது. 
அந்தப் படத்தின் நாயகியாக நடித்தவர் சீதா. முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அதுகல்யாணத்தில் முடிந்தது.
webdunia
 
இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த இந்த நட்சத்திர தம்பதிகள், பின்னர் ராதாகிருஷ்ணன் என்ற ஆண்குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். 
webdunia
 
மிகுந்த மகிழ்ச்சியோடு நதி போல ஓடிக் கொண்டிருந்த இவர்களது காதல் வாழ்க்கை திடீரென தடுக்கி விழுந்தது. பிறகு பல்வேறுகாரணங்களுக்காக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில மாதங்களுக்கு முன் தனித்தனியாக வசிக்க ஆரம்பித்தனர். 
 
இந்த பிரிவுக்குப் பின் தீவிரமாக டிவி மற்றும் சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் நடிகை சீதா.அந்த சமயத்தில்  உடன் நடிக்கும் ஒரு டிவி நடிகருடனும் சீதா கிசுகிசுக்கப்பட்டார். 
webdunia
 
இதனால் மிகுந்த விரக்தி அடைந்த பார்த்திபன் விவாகரத்து கோரி தனித்தனியாக குடும்ப நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர். 
 
பிரிந்த மனைவியை பற்றி பார்த்திபன் ஒரு பெட்டியில் கூறியது: ஒரு முத்தத்தின் சத்தத்தைக்கூட ஒரு கோடி வார்த்தைகளில் நான் கோத்துக்கோத்து அழகாக, எதிர்பாராத, மிக வித்தியாசமான வார்த்தைகளில் அவளை நான் புகழ்வது அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். எதை இழந்தாலும் அவளை இழக்கக் கூடாது என்கிற என் முனைப்பு அவளுக்குச் சிறிய பரிதாபத்தை ஏற்படுத்தியது. நாங்கள் முதன்முதலில் தேனிலவுக்குப் போனது டெல்லிக்கு. இந்தியாவின் உயர்ந்த விருதைக் கொண்டுவந்து அவள் கால்களில் ஒப்படைத்து, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து அவளுடைய பாதங்களுக்கு ஈரத்தோடு முத்தமிட்டது. அதெல்லாம் அவளைப் பரவசப்படுத்தும் என நினைத்து என்னை நான் பரவசப்படுத்திக்கொண்டேன்.
 
தன் மனைவியின் காதலுக்காகவே வாழ்ந்த பார்த்திபனின் அழகான வாழ்க்கை பலரின் கண்பட்டு சிதைந்துவிட்டது  என்று தான் சொல்லவேண்டும். 
webdunia
 
பார்த்திபன் இயக்கி நடித்த புள்ளக்குட்டிக்காரன், ஹவுஸ்ஃபுல், சுகமான சுமைகள், பொண்டாட்டி தேவை, குடைக்குள் மழை போன்ற படங்கள் பாராட்டப்பட்டன. இயக்குனராக வெற்றிபெற்ற பார்த்திபன், நடிகராகவும் பல படங்கள் ஹிட் அடித்திருக்கிறார்.
 
 ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் போன்ற நடிகர்களைத் தாண்டி வில்லனாக இருந்து கதாநாயகர்களாக மாறிய சரத்குமார், சத்யராஜ் போன்ற நடிகர்களின் திரைப்படம் வெளியாகி வெற்றிப்பெற்ற தொன்னூறுகளில் பார்த்திபனும் அவர்களுக்கு போட்டியான நடிகராக இருந்தார். 
 
கதாநாயகனுக்கென்று பிரத்தியேக பாணி எதுவும் இல்லாமல் பக்கத்துத் தெரு மனிதர் தோற்றத்தில் அவர் ஜெயித்ததுதான் சினிமா உலகினரிடையே ஆச்சரியம். அதேபோல் அஜித், பிரபுதேவா, முரளி போன்றவர்களுடன் இணைந்து நடிக்கவும் அவர் தயங்கியதில்லை 
 
பார்த்திபன் வாழக்கையில் மைல் கல்லாக அமைந்தது  குண்டக்க மண்டக்கவாக படத்தின் நகைச்சுவை காட்சிகள் தான். பேசி பேசி நகைச்சுவை செய்வதை பார்த்திபனின் பாணியாக மாற்றினார். 
 
அதற்கு உடந்தையாக இருந்தவர் வடிவேலு. பார்த்திபன் வடிவேலு கூட்டணி என்றால் நம்பி படத்திற்கு போகலாம் என திண்ணையில் உட்கார்ந்து பெருசுகளும் பேசிக்கொண்ட காலமும் உண்டு .
 
அப்படி  இவர்களின் கூட்டணியில் பாரதி கண்ணம்மா, பொற்காலம், உன்னருகே நானிருந்தால், புதுமை பித்தன், போன்ற படங்களில் இவரின் குண்டக்க மண்டக்க வசனத்தில் வடிவேல் சிக்கித் தவிக்கும் காட்சிகளைப் பார்த்தே குண்டக்க மண்டக்க என படம் எடுத்தார்கள். அதன்பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கும் வாய்ப்பு ஏதும் அமையவில்லை.
 
பார்த்திபனின் வித்யாசமான நடுஇப்பை போன்றே , அவர் எழுதும் கிறுக்கல்கள் கவிதை தொகுப்பு மிகப் பிரபலமான ஒன்று. எளிமையான சொற்களைக் கொண்டு ஆழமான சிந்தனையுடன் நம்மை சிந்திக்க வைப்பார் 
 
சினிமா மட்டுமல்லாது தன் நிஜ வாழ்க்கையில் எப்போதுமே குண்டக்க மண்டக்க பேசிக்கொண்டு குதூகளிக்கும் பார்த்திபனுக்கு இன்று  61 வயது. 
 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பார்த்திபன்!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேட்ட vs விஸ்வாசம் – பொங்கல் ரேஸில் பின்வாங்கப்போவது யார்?