Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்வையாளர்கள் இல்லாமல் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதி

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (08:07 IST)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தொலைக்காட்சி படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த தமிழக அரசு விரைவில் திரையரங்குகள் திறக்கவும் அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாமல் பூட்டியே இருப்பதால் அவற்றைத் திறந்து பழுது பார்க்கவும் புனரமைக்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு பார்வையாளர்கள் இல்லாமல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து திரையரங்குகள் புனரமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த 70 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகள் பூட்டியே இருந்ததால் திரைச்சீலைகள், சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவைகள் பழுதாகி இருக்கும் என்றும் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்தவுடன் திரைப்படங்களை திரையிட தயார் நிலையில் வைத்திருக்க திரையரங்கு உரிமையாளர்கள் தற்போது திரையரங்குகளை புனரமைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
திரையரங்குகள் மட்டுமின்றி  நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்கங்கள் ஆகியவற்றையும் பார்வையாளர்கள் இல்லாமல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments