இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

Siva
சனி, 22 மார்ச் 2025 (19:08 IST)
மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சிம்பு இணைந்து நடித்துள்ள ‘தக்லைஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
 
இந்த நிலையில், இப்படம் திரைக்கு வர இன்னும் 75 நாட்கள் உள்ளதை அறிவிக்கும் புதிய போஸ்டரை படக்குழுவினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இந்த போஸ்டரை பகிர்ந்த நிலையில், அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
நாயகன் படத்திற்கு பிறகு, மணிரத்னமும் கமல்ஹாசனும் இணையும் படம் என்பதால், ‘தக்லைஃப்’ மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
முன்னதாக, இப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சரியாக 75 நாள்களில் படம் திரைக்கு வரும் என உறுதிப்படுத்தும் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

பிரபல இயக்குனர்- மனைவி என இருவரும் கத்தியால் குத்திக்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் ‘தமிழ் வாழ்க’.. தெலுங்கு மாநிலங்களில் 'தெலுங்கு வாழ்க': சிவகார்த்திகேயன் குழப்பம்!

இவ்ளோ சினிமா பேசுறேன்.. இத என்னால செய்ய முடியல.. கமலுக்கு இருந்த வருத்தம்

என்னது ‘காதல் கோட்டை 2’வா? புது ட்விஸ்ட்டால இருக்கு.. தயாரிப்பாளரே சொல்லிட்டாரே

அடுத்த கட்டுரையில்
Show comments