Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் டைட்டில்: லாஸ்லியாவை பின்னுக்கு தள்ளிய ஒரே ஒரு பாட்டு

Advertiesment
பிக்பாஸ் டைட்டில்: லாஸ்லியாவை பின்னுக்கு தள்ளிய ஒரே ஒரு பாட்டு
, ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (06:30 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் வெளியேறியதும், அவருடைய ஆதரவாளர்களின் அமோக ஆதரவை பெற்ற லாஸ்லியாவுக்கு வாக்குகள் குவிந்ததால் லாஸ்லியாதான் டைட்டில் வின்னர் என அனைவரும் கணித்தனர். கடந்த வாரம் புதன்கிழமை வரை அதுதான் நிலைமையாக இருந்தது
 
ஆனால் திடீரென புதன்கிழமை நிகழ்ச்சியில் முகின் பாடிய ஒரு பாடல் இளைஞர்களை சொக்க வைத்துவிட்டது. ‘நீதான்... நீதான்... என்ற அந்த பாடல் பெண்களை பெருமளவு கவர்ந்ததால் அவருக்கு இளைஞர்களின் வாக்குகள் குவிந்தது. குறிப்பாக இளம்பெண்களின் வாக்குகள் குவிந்தது. இதனால் லாஸ்லியாவை ஒரே நாளில் முகின் முந்தினார். அதோடு தர்ஷன் ஆதரவாளர்களும் வாக்குகளும் முகினுக்கு செல்ல, முகினின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது
 
தற்போதைய நிலவரப்படி முகின் டைட்டில் வின்னர் என்றும், லாஸ்லியாவுக்கு இரண்டாமிடம் என்றும் சாண்டிக்கு மூன்றாமிடம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. முகினுக்கு டைட்டில் கிடைக்க காரணமான அந்த பாடல் இதுதான்:
 
webdunia
நீதான் நீதான்
நீதாண்டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தான் உன் புள்ள, என் புள்ள ..
 
சத்தியமா, நான் சொல்லுறேண்டி
உன் பார்வை ஆள தூக்குதடி
சத்தியமா நானும் பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கையை வாழ்ந்தபடி
 
கிறுக்கி உன் கிறுக்கல்
எழுத்துலதான்
கிறுக்கா என்ன நீ மாத்தி வச்ச
மனசில் இருக்குற ஆசையத்தான்
கிறுக்கா நான்
உன்மேல காட்டிப்புட்டேன்
 
இரு மீன்கள் ஒரு ஓடையில்
தண்ணீரில் தன்னை இழக்க
உன் காதல் என் காவியம்
உன்னோடுதான் கை கோர்க்க
 
என்ன மறந்த .. என்ன மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்
 
நீதான் நீதான்
நீதாண்டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தான் உன் புள்ள, என் புள்ள ..
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு பயிற்சி பெற சென்ற அஜித் ! வைரல் வீடியோ