Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினிமா ஹீரோவை கைது செய்து போலீஸார் அதிரடி

சினிமா ஹீரோவை கைது செய்து போலீஸார் அதிரடி
, வெள்ளி, 3 மே 2019 (19:08 IST)
கொச்சியில் சினிமா படப்பிடிப்பு தளத்தில் கஞ்சா வைத்திருந்த  கதாநாயகன் மற்றும் கேமராமேனை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கொச்சியில் கஞ்சா, பிரவுன் சுகர், கொகைன் போன்ற போதைப்பொருள்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீஸாருக்குத் தகவல் தெரிந்தது.
 
இதனையடுத்து போலிஸார் மற்று போதைபொருள்  தடுப்புதுறையினர் அதிரடியாக சோதனை நடத்திவருகிறார்கள். இந்நிலையில் தற்போது மலையாள சினிமா படப்பிடிப்பு தளங்களில் போதை பொருள்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியதகவல் வந்தது.
webdunia

இதையடுத்து ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் தோனி கிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகள் கொச்சியில் உள்ள சினிமா படப்பிடிப்பு தளங்களில் சோதனை நடத்தினர். 
 
இதில் ’இந்த ஜமீலாண்டே பூவன்கோழி’ என்ற சினிமா படப்பிடிப்பு தளத்தில் நுழைந்த கலால்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 
 
அப்போது அறிமுக நாயகன் மிதுன்(25) பெங்களூரைச் சேர்ந்த விசால்வர்மா ஆகிய இருவரிடமும் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து  வருவதாகத் தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் இந்திய குடிமகன் இல்லையா? ஆவேசம் அடைந்த ரஜினி பட நடிகர்!