Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞர் படத் தலைப்பை கேட்ட கிரேட் இந்தியன் கிச்சன் படக்குழு! ஏவிஎம் சொன்ன பதில் என்ன தெரியுமா?

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (08:19 IST)
தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வரும் கிரேட் இண்டியன் கிச்சன் படத்துக்கு கலைஞரின் பட தலைப்பை கேட்டுள்ளதாம் படக்குழு.

இயக்குநர் ஜோ பேபி இயக்கிய த கிரெட் இந்தியன் கிச்சன் திரைப்படம் Neestream தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றது. சூரஜ் வெஞ்சரமுடு, நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம் மொழி தாண்டியும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ரீமேக் உரிமையை பிஸ்கோத் படத்தின் இயக்குனர் கண்ணன் வாங்கியுள்ளாராம். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் அவரே இயக்க உள்ளாராம்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, அவரின் கணவராக சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்தரன் நடிக்கிறார். மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை 20 நாட்களில் மொத்தமாக முடித்துள்ளார் இயக்குனர் கண்ணன்.
இந்நிலையில் இந்த படத்துக்கு பராசக்தி என்ற பெயரை வைக்கலாம் என முடிவு செய்த படக்குழு, அதற்காக ஏவிஎம் நிறுவனத்தை அனுக, அவர்கள் தலைப்பை தர முடியாது என உறுதியாக சொல்லிவிட்டார்களாம். இதனால் புதிய தலைப்பை படக்குழு யோசித்து வருகிறார்களாம்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments