Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி கிரே மேன் படத்தின் ப்ரமோஷனுக்காக இந்தியா வரும் இயக்குனர்கள்… தனுஷ் வெளியிட்ட அப்டேட்!

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (15:54 IST)
தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான தி கிரே மேன் திரைப்படம் இந்த மாதம் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாகியுள்ளது.

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களான ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்கும் நெட்பிளிக்ஸ் திரைப்படமான ’தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்களை எழுத்தாளர் மார்க் கிரேனி முன்னர் பகிர்ந்திருந்தார். அதில் “இந்த படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ்” நடிக்கிறார் என்று பகிர்ந்திருந்தார்.

சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. ஆனால் டிரைலரில் தனுஷுக்கான காட்சிகள் அதிகமாக இல்லை. இது இந்திய ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமானதாக அமைந்தது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸை ஒட்டி படக்குழு இப்போது ப்ரமோஷன்களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக படத்தின் இயக்குனர்களான ஜோசஃப் ரஸ்ஸோ மற்றும் ஆண்டனி ரஸ்ஸோ ஆகிய இருவரும் இந்தியா வர உள்ளதாக தனுஷ் வீடியோ மூலமாக வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments