Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமா அறிவே கிடையாது: தங்கர் பச்சான் வீடியோ வைரல்..!

Siva
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (18:52 IST)
தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமாக அறிவே கிடையாது என்று ஒரு பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதே தெரியாது என்றும் இயக்குனர் தங்கர் பச்சான் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நடிகர் மற்றும் இயக்குனர் தங்கர்பச்சான் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாமக வேட்பாளராக கடலூர் தொகுதியில் போட்டியிட்டார் என்பதும் அவர் வெற்றி பெறுவாரா என்பது ஜூன் 4ஆம் தேதி தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்று முன் அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கடலூர்  மாவட்டத்தில் அதிகமாக முந்திரி பழம் விளைச்சல் இருக்கும் என்றும் இந்த முந்திரி பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது கூட தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது என்றும் அவர்களுக்கு சுத்தமாக அறிவே கிடையாது என்றும் கூறியுள்ளார். 
 
அரசியல்வாதிகள் ஒவ்வொரு ஊருக்கும் சாராய தொழிற்சாலை அமைக்கிறார்கள், ஆனால் முந்திரி பழத்தை ஜூஸாக மாற்றும் தொழிற்சாலை அமைத்தால் ஏராளமானவர்களுக்கு வேலை கிடைக்கும், பொதுமக்களுக்கு ஊட்டச்சத்தும் கிடைக்கும் என்றும் இது குறித்து யாரும் சிந்திக்கவே மாட்டேன் என்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments