Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பரம்பரை சொத்து வரி முறை.!. இந்தியாவின் வளர்ச்சியை சிதைத்து விடும்..! நிர்மலா சீதாராமன்..!

பரம்பரை சொத்து வரி முறை.!. இந்தியாவின் வளர்ச்சியை சிதைத்து விடும்..!  நிர்மலா சீதாராமன்..!

Senthil Velan

, வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (14:20 IST)
பரம்பரை சொத்து வரி முறை இந்தியாவின் பத்தாண்டு கால வளர்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் என காங்கிரஸ் கட்சியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். 
 
மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் இன்று நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு  BEs கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1968 -க்கு முன்பாக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மக்கள் தங்களது சொத்தில் இருந்து 18 முதல் 20 சதவீதம் வைப்புத்தொகையை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது என்றும் பல நேரங்களில் அந்த பணம் திருப்பி தரப்படாமல் போனது என்றும் தெரிவித்தார். அதற்கு சரியான விளக்கங்களும் தரப்படமாலும் இருந்தது என்று அவர் கூறினார்
 
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மக்கள் சம்பாதித்ததில் 90 சதவீதத்தை வரியாக செலுத்தினார்கள் என்றும் அதெல்லாம் தற்போதைய தலைமுறையினருக்கு தெரியாது என்றும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அதே நிலைக்கு திரும்புவோம் என்றும் நிர்மலா சீதாராமன் விமர்சித்தார்.
 
பரம்பரை வரியானது நடுத்தர வகுப்பினரையும், பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களையும் நேரடியாக பாதிக்கிறது என்ற அவர், பரம்பரை சொத்து வரி முறை இந்தியாவின் பத்தாண்டு கால வளர்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் என்று தெரிவித்தார்.

 
இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது போன்ற எதையும் பேசாமல், பிரதமர் மோடியை காங்கிரஸ் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் தாக்கி பேசி வருகிறது என்றும் காங்கிரஸிடம் நல்ல அஜெண்டா ஏதுவுமில்லை என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாமரை கண்டிப்பாக மலரும்.. வாக்களித்த பின் கீர்த்தி சுரேஷ் அம்மா பேட்டி..!