Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குனர் ஆகும் தம்பி ராமையா… தொடங்கிய ஷுட்டிங்!

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (09:12 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தம்பி ராமையா பன்முகத் திறமை கொண்டவர்.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நகைச்சுவை நடிகராகவும் அறியப்படுபவர். இவர் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவான இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படம் கவனத்தைப் பெற்றது. அதன் பின்னர் மைனா படம் மூலமாக முன்னணி நடிகராகிவிட்ட இவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் இயக்குனராக ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளார். மேலும் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்க உள்ளார். அவரோடு தம்பி ராமையாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் அவரும் தம்பி ராமையாவும் இணைந்து நடித்த விநோதய சித்தம் திரைப்படம் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் எளிமையாக தொடங்கியது. படத்துக்கு ‘ராசாக்கிளி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments