Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் போல் மிமிக்ரி செய்த விஜய்: அசந்து போன படக்குழுவினர்

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (20:56 IST)
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிரிட்டோ தயாரிப்பில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த படத்தின் கதை விவாதத்தில் ’ஆடை’ இயக்குனர் ரத்தினகுமார் அவர்களும் ஈடுபட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இயக்குனர் ரத்தினகுமார் அவர்கள் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு ஆச்சரியமான தகவலை வெளிப்படுத்தியுள்ளார்
 
இதுவரை நடிப்பு, பாடகர் என்ற ஒரு சில அவதாரங்களில் ஜொலித்து வந்த நடிகர் விஜய் தற்போது மிமிக்ரியிலும் ஈடுபட்டுள்ளது இவருடைய தகவலில் இருந்து தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
இன்று டெல்லி வந்தடைந்தேன். அதிக பயணத்தால் இன்று கதை விவாதத்தில் நான் ஈடுபடவில்லை. ஆனால் இன்று ஒரு அதிசயம் நடந்தது. ’மச்சி ஹேப்பி பர்த்டே’ என்று விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குரலில் மிமிக்ரி செய்து என்னை வாழ்த்தினார். நான் ஆச்சரியம் அடைந்தேன்.’ என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
 
தளபதி விஜய் தற்போது மிமிக்ரி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், தளபதி 64 படத்தில் ஒரு சில காட்சிகளில் விஜய் மிமிக்ரி செய்ய இருப்பதாகவும் அதற்கு பயிற்சி பெறும் வகையிலேயே அவர் அவ்வப்போது படக்குழுவினர்களிடமும் மிமிக்ரி செய்து பழகி வருவதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

முத்தையாவின் அடுத்த படத்தின் கதாநாயகன் இவர்தான்… வெளியான தகவல்!

கௌதம் மேனன் இயக்கத்தில் விஷால்… அடுத்தடுத்த ப்ளாப்களால் படத்தைக் கைவிட்ட சத்யஜோதி பிலிம்ஸ்!

முருகதாஸின் அடுத்த படத்தில் ஃபஹத் பாசில்… பாலிவுட்டில் எண்ட்ரி!

106 வயசுல எப்படி சண்டை போட முடியும்… இந்தியன் தாத்தா குறித்த கேள்விகளுக்கு ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments