Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்டகாசமாக வந்திறங்கிய தளபதி 63 பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (18:10 IST)
நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 63 படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சற்றுமுன் வெளியிட்டுள்ளது. 


 
தமிழ் சினிமா நடிகர்களில் அதிக ரசிகர்களுக்கு சொந்தக்காரர் நடிகர் விஜய். சினிமாவையும் தாண்டி தன் சொந்த அண்ணனாக கருதும் அளவிற்கு ரசிகர்கள் அவர் மீது பாசமும், மரியாதையும் வைத்துள்ளனர்.    விஜய் நடிப்பில் ஒரு படம் வெளிவருகிறது என்றாலே அதை திருவிழா போல கொண்டாடுவார்கள். அந்த அளவிற்கு தமிழ் சினிமா மட்டுமின்றி வேற்று மாநில ரசிகர்களும் விஜய்க்கு அதிகம். 
 
நடிகர் விஜய் தற்போது அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளார்.  விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி படத்திற்கு  மாஸ் தரும் வகையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். 
 
பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து கோச்சராக நடிக்கிறார். மேலும் அவர், தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும், அதில் மகன் கேரக்டரின் பெயர் பிகில் என்றும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது .
 
இந்நிலையில் சற்றுமுன்  இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  இந்த போஸ்டரில் தந்தை மற்றும் மகன் கதாப்பாத்திரத்தை குறிக்கும் வகையில் இரண்டு விஜய் இருக்கும் வகையில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் பெயர் பிகில் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்… இன்று முதல் மீண்டெழுமா?

பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் எங்க கம்பெனிக்குதான் சொன்னார்- கமல் பகிர்ந்த சீக்ரெட்!

மோடி சாதிகளை ஒழிச்சிட்டாரே? ஏன் பிராமணர்களாய் இருக்கீங்க? - ’புலே’ திரைப்பட பிரச்சினையில் இயக்குனர் ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments