Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரிலீசுக்கு முன்பே தமிழ் ராக்கரில் வெளிவந்த தமிழ்ப்படம். நடிகர் வேதனை

, வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (05:04 IST)
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கிய படம் 'லைட்மேன்'. இளைஞர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க கஷ்டப்பட்டு எடுத்த இந்த படம் கடந்த 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இந்த படத்தை 9ஆம் தேதியே தனது இணையதளத்தில் வெளியிட்டு படக்குழுவினர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.



இதனால் இந்த படத்தில் நடித்த கார்த்திக் நடராஜன் வேதனையுடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:

ஒரு குழுவாக எங்களது உழைப்பு, நேரம், பணம் ஆகியவற்றை இந்தப் படத்துக்காக முதலீடு செய்துள்ளோம். இதுபோன்றவர்களின் செயலால் எங்களது கனவு புதைக்கப்பட்டுள்ளது. இப்படி படத்தின் ரிலீசுக்கு முன்பே, அதை லீக் செய்வதால் அவர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது? இதனால் எங்களது படம் குறித்த விமர்சனத்தை ஊடகங்கள் வெளியிடவில்லை.

நான் கதாநாயகாக நடித்துள்ள முதல் படம் இது. 10 ஆண்டுகளுக்கு மேல் முயற்சி செய்து, முதன்முதலாக படத்தில் நடித்துள்ளேன். இதனால் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். நாங்கள் உதவிகள் இன்றி கைவிடப்பட்டு தனியாக இருக்கிறோம். இதுபோன்றவர்களின் செயல்களை எதிர்காலத்தில் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்" என வேதனையுடன் கூறியுள்ளார்.

இவரது கருத்தை நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட பலர் தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்து ஆதரவை தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேண்டாம் அதிமுக. திமுகவுக்கு செல்கிறார் ராதாரவி