Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் விருப்பப்பட்டு இணைந்த தமன்னா!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (10:08 IST)
நடிகை தமன்னா ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு டைட்டில் ”ஜெயிலர்” என்று வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் பெயர் தவிர மற்றவர்கள் பெயர் இடம்பெறவில்லை. சமீபத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் ஷூட்டிங் தொடங்கி நடந்து வரும் நிலையில் படத்தில் தமன்னா நடிப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதுபற்றி இப்போது மேலதிக விவரங்கள் வெளியாகியுள்ளன. படத்தில் தமன்னா ஒரு கெஸ்ட் ரோலில்தான் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக தமன்னா விருப்பப்பட்டு கேட்டுக்கொண்டு ஜெயிலர் படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெள்ளை நிற சேலையில் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் க்ளிக்ஸ்!

வேள்பாரி வரவே வராது… ஷங்கரை நம்பி அவ்வளவு காசு யாரும் போடமாட்டார்கள்… பிரபலம் கொடுத்த அப்டேட்!

ஒருவழியாக முடிந்தது கவினின் ‘கிஸ்’ படத்தின் ஷூட்டிங்!

துருவ நட்சத்திரம் படத்தை சூர்யா நிராகரித்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. கௌதம் மேனன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments