Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோ இல்லாமல் முதல்முறையாகத் தனியாகக் களமிறங்கும் தமன்னா!

Webdunia
புதன், 27 மார்ச் 2019 (10:59 IST)
தமன்னா தமிழில் ‘தேவி-2’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, இந்தியிலும் படங்கள் கைவசம் உள்ளன.


இந்தநிலையில், தமன்னா முதல்முறையாக ஹீரோ இல்லாத படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். 
 
கடந்த 2017-ம் ஆண்டு ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன், ஜனனி, ஷிவதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அதே கண்கள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற அந்தப் படத்தை சி.வி.குமார் தயாரித்திருந்தார். முதல் பட வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது படத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்திவந்த வெங்கடேசன், ஹாரர் ஜானரைக் கையில் எடுத்திருக்கிறார். 
 
வெங்கடேசன் சொன்ன கதையைக் கேட்ட தமன்னா, அதில் தானே நடிப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோ ரோல் கிடையாது என்றும், படம்  முழுக்க முழுக்க தமன்னாவின் கதாபாத்திரத்தைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்கிறார்கள். தமன்னாவுடன் யோகி பாபுவும் இந்தப் படத்தில் நடிக்கிறார். விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

6 படங்களின் கதையும் ஒரே மாதிரியா? அதில் ரஜினி, அஜித் படங்களும் அடக்கம்.. ஆச்சரிய தகவல்..!

சிம்பு - வெங்கட்பிரபு படத்திற்கு வாய்ப்பே இல்லை.. சிம்புவின் லைன் - அப்பில் ‘மாநாடு 2’ இல்லையா?

காளி வேஷம்.. கையில சிலுவை.. ஆபாச நடனம்! - சர்ச்சைக்குள்ளான ஆல்பம் பாடல்!

மொட்டைத்தலையுடன் அஜித் கெட்டப்.. புதிய படத்திற்கான கேரக்டர் லுக்கா?

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments