Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுசி கணேசன் எவ்வளவு அழுக்கானவர் என்பதுக்கு இதுவே சாட்சி: லீனா மணிமேகலை

சுசி கணேசன் எவ்வளவு அழுக்கானவர் என்பதுக்கு இதுவே சாட்சி: லீனா மணிமேகலை
, புதன், 17 அக்டோபர் 2018 (19:04 IST)
இயக்குநர் சுசி கணேசன் சித்தார்த் குடும்பத்தினரை மிரட்டியிருப்பதாகவும், இதுவே சுகிகணேசன் எவ்வளவு அழுக்கானவர் என்பதற்கு சாட்சி என்றும் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.
 
இயக்குநர் சுசி கணேசன் மீது மீ டூ ஹேஷ்டேகின் கீழ்  ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை புகார் கூறியிருந்தார். இந்நிலையில் லீனாவுக்கு ஆதராவாக இருப்பேன் என்று நடிகர் சித்தார்த் டுவீட் போட்டிருந்தார். இதற்காக சுசு கணேசன் தொலைபேசி வாயிலாக தனது தந்தையை மிரட்டியதாகவும், இதற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை என்றும் சித்தார்த் மற்றொரு டுவிட் போட்டிருந்தார். 
 
இந்நிலையில் சித்தார்த்தின் டுவிட்டை குறிப்பிட்டு லீனா வெளியிட்டுள்ள பதிவில், "உங்கள் குடும்பத்தினர் இத்தகைய சங்கடத்தை சந்திக்க வேண்டியிருந்ததற்கு வருந்துகிறேன். இதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை. என்னுடன் துணை நிற்கும் உங்கள் குடும்பத்தினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  நாம் இந்த அரக்கனை ஒன்றிணைந்து எதிர்ப்போம். அவருடைய நடத்தைகள் அவரது குற்றத்தையும் அவர் எவ்வளவு அழுக்கானவர் என்பதையும் உணர்த்துகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் ஜான் விஜய் போன் செக்ஸ் கேட்டார் : பாடகி ஸ்ரீரஞ்சனி புகார்