நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் தொடங்குவது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நஸ்ரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. நஸ்ரியா கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்கள் எதிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.