Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலில் ஈடுபடும் நடிகர்களுக்கு ஆதரவா? அக்கடதேசத்தில் சூர்யா அளித்த பதில்....

Webdunia
புதன், 17 ஜனவரி 2018 (21:34 IST)
நடிகர் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தை விக்சேஷ் சிவன் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார்.
 
பொங்கல் வெளியீடான இந்த படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் தெலுங்கில் கேங் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆந்திராவிலும் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 
 
இதனால், நடிகர் சூர்யா ஆந்திராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். அப்போது, ஐதராபாத்தில் நடிகர் சூர்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
 
சூர்யவிடம் தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு படையெடுப்பது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. மேலும், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? அரசியலில் ஈடுபடும் நடிகர்களை ஆதரிப்பீர்களா? என்றும் கேள்வி கேட்கப்பட்டது.
 
அதற்கு சூர்யா, எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் கிடையாது. நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறப்படுவது தவறான தகவல். அதே சமயம் அரசியலில் ஈடுபடும் எந்த நடிகரையும் ஆதரிக்கவில்லை. எதிர் காலத்திலும் யாரையும் ஆதரிக்க மாட்டேன் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

திடீரென மொட்டையடித்த ‘காதல்’ பட நடிகை.. சாமியாராக போகிறாரா?

கோட் படத்தில் டி ஏஜிங் பணிகளில் தாமதம்… ரிலீஸ் பாதிப்பா?

முதல் படத்தை முடிக்கும் முன்னே இன்னொன்னா?… டிடிஎஃப் வாசனின் அடுத்த பட டைட்டில்!

தாமதம் ஆகிறதா விஜய்- ஹெச் வினோத் திரைப்படம்?

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தில் இணைந்த விஜய்யின் தம்பி!

அடுத்த கட்டுரையில்
Show comments