நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படம் சிம்ப்ளி ப்ளை என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் நடிகர் சூர்யா கேப்டன் ஜி ஆர் கோபிநாத்தின் பாத்திரத்தில்தான் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் திரைக்கதை சிம்ப்ளி பிளை என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.