Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேட் மீது ஏறி குதித்து பரபரப்பை ஏற்படுத்திய சூர்யா

Webdunia
செவ்வாய், 16 ஜனவரி 2018 (13:40 IST)
விக்னேஷ் ஷிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 12ம் தேதி வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம், தமிழ் அல்லாது பிற மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர். கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் சொடக்கு போடு என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்டுடியோ கீரின் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படம் தமிழகத்தில் 450க்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.

தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாகிய மூன்றே நாட்களில் சுமார் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படம் ஆந்திராவில் ரூ.5.3 கோடியும், கர்நாடகாவில் ரூ.2.9 கோடியும், கேரளாவில் ரூ.4.1 கோடியும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ரூ.1.5 கோடியும், வெளிநாடுகளில் சுமார் ரூ.10 கோடியும் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. சூர்யாவின் முந்தைய படங்களில் வசூலைக் காட்டிலும் இத்திரைப்படத்திற்கு கிடைத்த வசூல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தெலுங்கு ரசிகர்களை சந்திக்க ஆந்திரா சென்றிருக்கும் சூர்யா ராஜமுந்திரியிலுள்ள ஒரு திரையரங்கிற்கு சென்றார். ரசிகர்கள் கூட்டம் அலைமோதவே வேறு வழியின்றி சூர்யா தியேட்டரின் மூடிய கேட்டின் மேல் ஏறி குதித்துள்ளார். சூர்யாவின் இச்செயல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைந்த ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’!

வசூலில் படுமந்தம்… பெரும் பட்ஜெட்டில் உருவான மோகன்லாலில் பரோஸ் படத்தின் நிலை!

இந்துஜா ரவிச்சந்திரனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

தமிழ்ப் படம் புகழ் ஐஸ்வர்யா மேனனின் கார்ஜியஸ் போட்டோஸ்!

பொங்கல் ரிலீஸை உறுதி செய்த மெட்ராஸ்காரன் படக்குழுவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments