சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் சூர்யாவின் அடுத்த படமான 'சூர்யா 36 திரைப்படம் விரைவில் ஆரம்பமாகும் என்றும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கவுள்ளார் என்பதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது 'சூர்யா 36' திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அருவி, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற தரமான படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்குகிறார்
நேற்றைய புத்தாண்டு முதல் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும்,.வருகிற பொங்கல் முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு .சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் S.R.பிரகாஷ் , S.R.பிரபு ஆகியோர் அறிவித்துள்ளனர்.