Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க கை குடுத்தாலே அது ஆஸ்கர் வாங்குனதுக்கு சமம்! - ராஜமௌலியை புகழ்ந்து தள்ளிய சூர்யா!

vinoth
வெள்ளி, 8 நவம்பர் 2024 (09:03 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாக உள்ளது கங்குவா திரைப்படம். இந்த  படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ரிலீஸ் நவம்பர் 14 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா படம் ரிலீஸாகி இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளதால் கங்குவா படம் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தை வட இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என நடிகர் சூர்யா பல முன்னணி இந்தி ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யாவுடன் முன்னணி இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி கலந்துகொண்டார். அப்போது பேசிய சூர்யா “எல்லோரும் நம் மொபைல் வால் பேப்பராக நமது குடும்ப புகைப்படத்தை வைத்திருப்போம். ஆனால் ஞானவேல் உங்கள் (ராஜமௌலியின்) புகைப்படத்தைதான் வைத்துள்ளார். நீங்கள் அவருக்குக் கைகொடுத்தால் அது நாங்கள் ஆஸ்கர் வாங்கியதற்கு சமம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments